10484 இரண்டாம் உயிர்: கவிதைத் தொகுப்பு.

கு.வீரா. யாழ்ப்பாணம்: வர்ணம் கிரியேஷன்ஸ், அளவெட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 545, பருத்தித்துறை வீதி, நல்லூர்).

xvi, 144 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்தக் கவிதைத் தொகுப்பில் வீராவின் 60 கவிதைகள் இருக்கின்றன. அத்தனையும் புதுக்கவிதை வகையைச் சார்ந்தவை. வீராவின் இலக்கியக் கொள்கை, சமுதாயப் பார்வை, மனித மேம்பாட்டிற்கான அவரது சிந்தனைப் போக்கு போன்றவற்றை இக்கவிதைகளில் தரிசிக்க முடிகின்றது. இவரது கவிதைகளில் சமூக விமர்சனங்களையும் காணமுடிகின்றது. அனுபவித்து உணர்ந்து உருகும் ஓர் இலக்கிய உலகை இவை எமக்குக் காட்டுகின்றன. ஒரு வேகத்தோடு எளிமையோடு அலங்கார வார்த்தை அநாவசியங்கள் ஏதுமற்று இக்கவிதைகள் கவிஞனின் உள்ளத்தைப் பிணைத்து நிற்கின்றன.

ஏனைய பதிவுகள்

15860 வரலாறு ஆண்டு 11 (புதிய பாடத்திட்டம்).

கமலா குணராசா (மூலம்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், 225, ஸ்ரான்லி வீதி). 84 பக்கம்,