ந.பிரதீப். மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி).
(vi), 64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-13060-0-1.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான பிரதீப்பின் போருக்குப் பின்னதான கவிதைகள் இவை. ஒரு போராளியின் குரலாக ஒலிக்கும் இக்கவிதைகள் ஆயுதம் ஏந்தி உரிமை கேட்டவர்களை அழித்துவிட்டதால் சமாதானமும் அமைதியும் பிறந்துவிட்டது என்று அரசியல் தலைவர்களால் அறிவிக்கப்பட்ட இக்காலச் சூழலில் ஒரு முன்னாள் போராளியின் குரல் எழுந்திருக்கிறது. இன்றைய சூழலையும், போராளிகளற்ற அரசியலையும், கட்டுப்பாடற்ற சமூக நிலையையும் இவர் தன் பார்வைகளினூடாகப் பதிவுசெய்கின்றார். தன் தேசம் தனதென்றில்லை என்றான கணப்பொழுதுகளின் சோகம் இவ்விடுதலைப் போராளியை ஒரு சமூகப்போராளியாகக் காட்டிநிற்கின்றது.