ஏயெம் தாஜ். அக்கரைப்பற்று 1: ஏ.எம்.தாஜ், 3 ஏ, சின்ன மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு: ஏ.ஐ. பிரின்டர்ஸ்).
(6), 80 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-54480-0-0.
இலங்கை வானொலியின் அறிவிப்பாளராகப் பணியாற்றும் சட்டத்தரணி ஏயெம் தாஜ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. கவிஞரின் முதலாவது நூல். சிறியதும் பெரியதுமான 43 கவிதைகளை உள்ளடக்கியது. வேதாந்தி-சேகு இஸ்ஸத்தீன் எழுதிய முன்னுரை ஆசிரியரை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்றது. மென்மையான அவனது உள்ளத்தைப் போர்த்திய மேலங்கியில் முஸ்லிம் சமூக உரிமைப் போராட்டத்துக்கான உணர்வுக் குண்டுகளைச் சுமந்து திரிந்தவன் அவன் என்று ஆசிரியரை அறிமுகப்படுத்துகிறார்.