10490 இரும்புக் கதவுக்குள் இருந்து: கவிதைத் தொகுப்பு.

விவேனகானந்தனூர் சதீஸ். யாழ்ப்பாணம்: யாழ். கலை இலக்கியக் கழகம், 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: குரு அச்சகம்).

xx, 120 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-54448-0-4.

விவேகானந்தனூர் சதீஸ், கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கைச் சேர்ந்தவர். காலத்தின் கோலத்தால் ஆறாண்டுகளாக புதிய மகசீன் சிறையில் சிறைவாசம் அனுபவிப்பவர். இத்தொகுப்பில் உள்ள அறுபத்தாறு கவிதைகளிலும் ஆசிரியரின் துன்பங்களும், எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் துலக்கமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன. கவிஞர் சிறைக்குள் இருந்த காலகட்டத்திலேயே இந்தக் கவிதைகளை எழுதியுள்ளார். இரும்புக்கதவுக்குள் இருப்பவர்களின் ஏக்கங்களும், தாகங்களும், தமிழ்ச் சமூகத்தின் இடப்பெயர்வு, சிறைவாழ்வு, புனர்வாழ்வு, பெண்சுதந்திரம், ஊடக ஒடுக்குமுறை என்பன இக்கவிதைகளில் ஊடுபரவி நிற்கின்றன. தன்னைப் பெற்றெடுத்த தாயை முதல் கவிதையிலேயே வாழ்த்துவதுடன் தொடங்கி 66 கவிதைகளில் தன் உணர்வுகளுக்கு வடிகால் தேடிக்கொண்டிருக்கிறார். பெரும்பாலும் இத்தொகுதிக் கவிதைகள் சிறையில் வாடும் உள்ளங்களின் வேதனை வெளிப்பாடுகளாகவும், அன்றாட நிகழ்வின் அசைபோடல்களாகவும் இருக்கின்றன.

ஏனைய பதிவுகள்