அரசினர் ஆசிரியர் கலாசாலை. கொட்டகலை: தொகுப்பாசிரியர் குழு, அரசினர் அசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).
34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
2008இன் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளிவந்த கொட்டகலை ஆசிரியர் கலாசாலை பயிற்சி ஆசிரிய-மணவியர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. நாளைய வாழ்வுக்கான பெண்களின் கனவுகள் இங்கு கவிதைகளாகின்றன. கல்வி, பணித் தேவைகள், பெண்களின் சமத்துவம், பெண் விடுதலை, சமூக விழிப்புணர்வு என்பன கவிதைகளின் பாடுபொருள்களாகின்றன.