மருதூர் ஏ.எல்.அன்ஸார் (தொகுப்பாசிரியர்). சாய்ந்தமருது 2: மருதூர் ஏ.எல்.அன்ஸார், லக்ஸ்டோ எம்.என்.எஸ். நிறுவனம், கைய்ரியா மன்ஸில், 184, எம் 1, கடற்கரை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2011. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ல்ட்).
(17), 18-116 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0609-02-4.
கலை, இலக்கிய, சமூக சேவை, ஊடகத்துறை, கல்வி மேம்பாடு என சமூகத்தின் குரலாகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து 15 ஆண்டு காலமாக இயங்கிவரும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரணை வெளியீடாக இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இவ்வமைப்பின் தலைவராக இந்நூலின் தொகுப்பாளர் மருதூர் ஏ.எல்.அன்ஸார் இயங்குகின்றார். இலைமறை காயாக இருக்கும் 27 இஸ்லாமிய கவிஞர்கள் இந்நூல் வழியாக அறிமுகமாகியுள்ளார்கள். மருதூர் ஏ.எல்.அன்ஸார், கலைமகள் ஹிதாயா, யூ.எல்.எம்.பைஸர், முஹம்மது நவாஸ் (ஸிஹாப்), சுல்பிகா ஷெரீப், எம்.ஐ.எம்.முஜீப், மாஹிறா முஜீப், சம்சுதீன் ஜனூஸ், சப்னா அமீன், சி.தர்பா பானு, ஏ.எல்.ஜாபிர், சுஹைதா ஏ.கரீம், பாயிஸா அலி, வதுறுதீன் முஹம்மட் றியாத், கே.எம்.முஹம்மட் சித்தீக், ஐ.முஹைதீன், அமானுள்ளா சுஜானா, எம்.எம்.எஸ். பஸினா, எம்.எச்.ஜிப்ரியா, மர்சூகா ஜெமீல், றிஸ்வியா தாஹிர், சமீம் முஹம்மட் சனீம், றிம்ஷா முஹம்மட், எச்.எப்.றிஸ்னா, ரபீக் மொஹிடீன் ஆகியோருடன் முஸ்லிம் அல்லாத கவிஞர்களான தங்கராசா மெரினா, ந.பவதாரிணி ஆகியோரின் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57399).