10518  ஒரு தேடல்: கவிதைத் தொகுதி.

முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). கல்முனை: உமா சந்திரன், கண்மணி பிரசுரம், நெசவு நிலைய வீதி, பாண்டிருப்பு 01, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி).

116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-54011-5-9.

புதுக் கவிதைக்கு ஓசை ஒரு பொருட்டல்ல என்பதே பொதுவிதி. எனவே இக்கவிதைத் தொகுதியிலுள்ள கவிதைகள் யாவுமே என் நோக்கில் ‘சிந்தல்’ களாகவும் ‘நறுக்கு’ களாகவும் அமைவதால் இந்நூலின் வரவினை ‘பொழிச்சல்’ எனும் புதிய இலக்கிய வகைக்குள் வைத்துப்பார்க்கவே நான் விழைகின்றேன். இத்தொகுதியிலுள்ள 52 கவிதைகளும் மனிதனொருவன் தன் வாழ்வில் நல்லதையே நினைத்து, நல்லதையே சொல்லி, நல்லதையே  செய்யவேண்டும் என்று விரும்புகின்ற நூலாசிரியர் முகில்வண்ணன் அவர்களின் நல்ல மனம் வெளிப்படும்படியாக விளங்குகின்றது. உணர்ச்சிக் கொந்தளிப்புகளாக அல்லாமல் எவரும் புரிந்துகொள்ளக்கூடிய மொழிப் பிரயோகத்தில் மனதில் பதிந்து மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில்சிந்தனையைத் தூண்டும் வண்ணம் சிறந்த அறிவூட்டல் கவிதைகளாக இருப்பதே இக்கவிதைகளின் சிறப்பு (செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்- செங்கதிர்). (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 1001434). 

ஏனைய பதிவுகள்