மன்னூரான் (இயற்பெயர்: எஸ்.எச்.எம்.ஷிஹார்). மன்னார்: எஸ்.எச்.எம்.ஷிஹார், மன்னார் எழுத்தாளர் சங்கம், 653, காஷ்மீர் வீதி, உப்புக் குளம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (தல்கஸ்பிட்டிய: ஒக்ஸ்போர்ட் பிரின்டர்ஸ்).
xxiv, 82 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 17.5×11 சமீ., ISBN: 978-955-53137-0-4.
மரபுக்கவிதைகளாலும், புதுக்கவிதைகளாலும் ஒரு யுகத்தின் சோகத்தின் வலியின் சுவடுகளை மன்னூரான் பதிவுசெய்திருக்கிறார். பிரயத்தனம் தொடங்கி வாக்குறுதி ஈறாக 45 தலைப்புக்களில் இன்பம், துன்பம், சோகம், கண்ணீர், காதல், களிப்பு, கேள்விகள் என கொப்பளிக்கும் உணர்வுகளைக் கோவைப்படுத்தியுள்ளார். இலங்கையின் யுத்த காலங்களில் ஏற்பட்ட கொடூரங்கள், மனதில் வடுக்களாய் நிலைத்த காயங்களானவை. அவற்றைத்தன் கவிதைகளில் இக்கவிஞர் இறக்கிவைத்திருக்கின்றார்.