10522 ஒவ்வா (கவிதைகள்).

ஸர்மிளா ஸெய்யித். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, செப்டம்பர்; 2014. (சென்னை 600077: மணி ஓப்செட்).

72 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-52-3.

கிழக்கிலங்கையின் ஏறாவூரில் 1982இல் பிறந்தவர் ஸர்மிளா ஸெய்யித். இதழியல், கல்வி முகாமைத்துவம், உளவியல்துறைகளில் பயின்றவர். ‘சிறகு முளைத்த பெண்’ என்ற தன் முதல் கவிதைத் தொகுப்பினை 2012இல் வெளியிட்ட இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி இதுவாகும். முன்னைய தொகுதியில் ஈட்டிய நம்பிக்கையை இத்தொகுப்பில் பலப்படுத்திக் கொண்டுள்ளார். முந்தைய கவிதைகளிலிருந்து முன்நகர்ந்து சென்றுள்ளார். பெண்ணின் இருப்பின் சுக துக்கங்களை அழுத்தமாகப் பேசும் கவிதைகளின் தொகுப்பு இது. தன் இருப்பின் நியாயங்களை, போராட்டங்களை, பெருமிதத்தை, தான் தேடிப்பெற்ற விடுதலையை எடுத்துரைப்பவை இவை. வழமையான உணர்வுகளுடன் இறுகி இருக்கும் மனதுக்கு ‘ஒவ்வா’ இக்கவிதைகள். ஏனெனில் இவை சற்றேனும் சாயம்பூசப்பெறாத வார்த்தைகளைக் கொண்டவை. உடலின் மொழியிலும் உடலைத் தாண்டியும் இயங்கும் இக்கவிச் சொற்கள் அகண்ட மானுடத்தின் வேட்கையை நிறுவுகின்றன.

ஏனைய பதிவுகள்