கு.நாகேந்திரன். புத்தளம்: கலை இலக்கிய வட்டம், 23/1 ஜே.பி. வீதி, 5-ம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000.(கொழும்பு 11: கே.ஏ.அச்சகம், எஸ்.19, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி).
18 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 20×14.5 சமீ.
குமாரசாமி நாகேந்திரன் ஏறாவூர் நாலாம் குறிச்சியில் 19.10.1968இல் பிறந்தவர். 1990களில் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்தவர். பின்னர் நாடு திரும்பி, புத்தளத்தில் ஒலிக்கலைஞராகப் பணியாற்றி வருகின்றார். மேடை நாடகக் கலைஞரான இவர் இரத்தினபுரி நல்லுறவு ஒன்றியம் வழங்கிய கலாஜோதி, சிலோன் யுனைட்டட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழங்கிய கலைத்தென்றல் ஆகிய பட்டங்களைப்பெற்றவர். இலக்கியத்துறையிலும் ஈடுபாடு கொண்ட கவி நாகேந்திரனின் கவிதைகளின் தொகுப்பாக இச்சிறுநூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21234).