10524 ஓவியம் செதுக்குகிற பாடல்.

ஸ்ரீ பிரசாந்தன். தமிழ்நாடு: த பாபிரஸ், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது பதிப்பு, 2011. (திருச்சி மாவட்டம்: அடையாளம் பிரஸ், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310).

63 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18×11 சமீ., ISBN: 978-81-908552-2-8.

அழகியலின் எந்த முனையும் நசுங்காத, கச்சிதமான கவிதைகள் இவருடையவை. வெவ்வேறு வெளிப்பாட்டு வடிவங்களிலும் முறைகளிலும் ஸ்ரீ பிரசாந்தன் எளிய, தீர்க்கமான பார்வைகளுடன் எட்டுத் திசைகளையும் பதிவுசெய்துவிட்டு நகர்ந்துசென்றுவிடும் போக்கை இக்கவிதைகளின் வழியாக அவதானிக்கமுடிகின்றது. கொள்ளிக்கண், புதிர், வன்னிக்காடு 2009, உலரும் மழை, இடையனை மேயும் வாழ்க்கை, கோலக்குமரி, ஓவியம் செதுக்குகிற பாடல், சுமைதாங்கி, மீனு வாங்கலையோ, ஆதி வினா, மதுவின் கைப்பிடித்து, காவற்புனல், பாட்டியுடன் கழியும் பொழுது, திருத்தம், கற்காலம், சுழல், முக்கிய அலுவல், கனவின் புதிர் உரையாடல், உச்சுவிற் குளம், செய்திகள் வாசிப்பது.., பயம், வசந்தமும் இலையுதிர்வும், கூட்டுப் புழு, ஆதிப் பறவைகளின் தரையில், கொல்லையில் காத்திருக்கிறது கோலம், யாருடையது, மழிக்கமுடியா நினைவுகள், உள்ளே வெளியே, கூவும் துயர், நகரத்தை அளவெடுக்கிறது பாடல், ?, சிவயோகா ஆகிய தலைப்புகளிலான 32 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளரும், அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளருமான இக்கவிஞர் காலச்சுவடு சர்வதேச அளவில் நடத்திய சுந்தரராமசாமி 75 கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52765).

ஏனைய பதிவுகள்