அ.உமாகரன். யாழ்ப்பாணம்: சிறுவர் செயற்பாட்டுக் கழகம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, வைகாசி 2012. (யாழ்ப்பாணம்: வைரஸ் பதிப்பகம், இணுவில்).
32 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100., அளவு: 19.5×11.5 சமீ.
குரலடங்கிப் போன நம் தேசத்துக்காய் குரல்கொடுக்கும் ஒரு பள்ளி மாணவனின் கவிதைகளே இந்தக் கண்ணீர்ப் பூக்கள். ‘இணையத்தைக் கைத்தடியாய்ப் பிடித்து ஒரு இமயச் சுமையைச் சுட்டுகிறான். சோமாலியம் தெரிகிறது. இந்து(க்கல்லூரி) ஈன்றவர்கள் இழிவாய்ப் போவதில்லை. இந்துவின் தமிழ்ச்சங்கம் தந்த சிறு கவிஞன் கண்ணீர்ப்பூக்கள் என்று ஒரு வரலாறு செய்கின்றான். மூன்று தேசிய விருதுகள் இவன் அன்னைக்கு ஈந்தான். 25க்கும் மேலே பரிசுகள், தங்கமும் சேர்த்து ஆரமாய்த் தந்தான். அன்னை இவனைக் கவிஞன் ஆக்கினாள். நல்ல மனிதன் ஆக்கினாள். இன்றுபெரிதும் உவக்கின்றாள்’ என்று யாழ். இந்துக்கல்லூரி அதிபர் வீ.கணேசராசா இவ்விளம் கவிஞனை இந்நூல் வழியாக வாழ்த்தியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3773).