கவிதா விக்னேஸ்வரன். நோர்வே: கவிதா விக்னேஸ்வரன், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு 6: புதிய கார்த்திகேயன் அச்சகம்).
105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×11.5 சமீ.
புலம்பெயர் சூழலில் நோர்வேயில் உருவாகிய ஒரு ஈழத்து இளம் கவிஞராகக் கவிதா அறிமுகமாகியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் குரும்பசிட்டியில் பிறந்து நோர்வேயில் வளர்ந்த இவ்விளம் பெண் கவிஞரின் கவிதைத்தொகுதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2002இல் வெளியிடப்பட்டது. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பல இளம்பெண்களில் ஒருத்தியாய் தனக்குள் இருக்கும் ஏக்கங்களையும் விருப்பு-வெறுப்புகளையும் ஓய்வுநேரங்களில் எழுதிச் சேர்த்தவைகளை இந்நூலில் பதியம் வைத்துள்ளார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 2006இல் ‘பனிப்படலத் தாமரை’ என்ற தலைப்பு மாற்றத்துடன் வெளிவந்துமுள்ளது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 7515). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24193).