10534 கறுப்பு வெள்ளை படம்: கவிதைத் தொகுதி.

ஜெயசந்திரன் அபிராம் (புனைபெயர்: கலாரசிகன்). வவுனியா: ஜெ.அபிராம், இல.96, பழைய மில் வளவு, வெளிக்குளம், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).

iv, 46 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 120., அளவு: 19×12 சமீ., ISBN: 978-955-42047-0-6.

பாடசாலைக் காலங்களில் கவிதைத்துறையில் தன் உணர்வினைச் செலுத்திவந்த அபிராம், வவுனியா கல்வியியற் கல்லூரியில் கற்ற வேளையிலும் அதனைத் தொடர்கின்றார். ‘மூவருலா’ என்னும் கவிதைத் தொகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது கவிதைகளையும் பதிவுசெய்த இவ்விளம் கவிஞர் ‘காவியப் பிரதிபா’ என்னும் கவிதைக்கான சிறப்பு விருதினை சமஸ்த லங்கா ஜாதிக கவி சம்மேளனத்தினால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். இக்கவிதைத் தொகுதியின் மூலம் தனியாகத் தனது கவிதைகளைச் சுமந்து வருகின்றார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 1001437). 

ஏனைய பதிவுகள்