எம்.பீ. முஹம்மது றபீக். அட்டாளைச்சேனை: கலை கலாசார மன்றம், அரசினர் ஆசிரிய கலாசாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (அக்கரைப்பற்று: மைக்ரோ பீசீ சிஸ்டம்ஸ்).
v, 76 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-50721-0-6.
1996 இல் தினமுரசில் கவிதையுடன் எழுத்துலகில் அறிதகமானவர் றபீக். பதினொரு ஆண்டுகளாகத் தேசிய பத்திரிகைகளிலும், பல்வேறு சஞ்சிகைகளிலும் இவர் எழுதிய 33 கவிதைகளின் தொகுப்பாகவும் இவரது முதலாவது நூலாகவும் இத்தொகுப்பு அமைகின்றது. கிராமிய மணம் கமழும் மண்வாசனைக் கவிதைகளையும், தேசபக்தியுடன் அன்றாடப் பிரச்சினைகளையும் இவரது கவிதைகளுக்குள் காணமுடிகின்றது. காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் தூக்கலாக உள்ளன. இடப்பெயர்வு, போர்ச்சூழல் அதன் அவலங்கள் போன்றவற்றையும் இவரது கவிதைகள் சித்திரிக்கின்றன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 128807).