10539 காலகட்டம்:கவிதைத் தொகுப்பு.

ஈழத்துப் பூராடனார். (இயற்பெயர்: க.தா.செல்வராஜகோபால்). நிழல் சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், 1183 பொரஸ்ட்வுட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6, 1வது பதிப்பு, 2001. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம். 1183 பொரஸ்ட்வுட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6).

xxxii, 316 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 30., அளவு: 21.5×14 சமீ.

ஈழத்துப் பூராடனார் தான் இயற்றிய கவிதைகளை குறிப்பிட்ட ஒன்பது காலகட்டங்களாக வகுத்து அவ்வக்காலகட்டங்களில் எழுதியவற்றில் மொத்தம் 242  கவிதைகளைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார். முதலாவது காலகட்டம் 1945-1950 வரை இவரது ஆரம்பகால 16 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 1951-1956 இடைப்பட்ட காலத்தில் இவர் 44 கவிதைகளைப் பதிவுசெய்திருக்கிறார். 1956-1960க்குரிய மூன்றாவது காலகட்டத்தில் இவரது 15 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறே 1961-1965க்கு இடைப்பட்ட நான்காவது காலகட்டத்தில் 7 கவிதைகளையும், 1966- 1975க்கு இடைப்பட்ட ஐந்தாவது காலகட்டத்திற்குரிய 14 கவிதைகளையும், 1976-1980க்குரிய ஆறாவது காலகட்டத்தில் எழுதப்பட்ட 7 கவிதைகளையும், ஏழாவது காலகட்டமான 1980-1984 காலப்பிரிவுக்குள் எழுதப்பட்ட 25 கவிதைகளையும், 1985- 1994 காலகட்டமான எட்டாவது காலகட்டத்துக்குரிய 53 கவிதைகளையும், இறுதியாக 1999க்குப் பின்னையதான ஒன்பதாவது காலகட்டத்துக்குரியதாக 61 கவிதைகளையும் இத்தொகுப்பில் பதிவுசெய்திருக்கிறார். ஈழாத்துப் பூராடனாரின் கவித்துவ வளர்ச்சியும் அவர் எடுத்தாளும் கவிதைகளின் காட்சிப்புலமும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிச்செல்வதை அவதானிக்கமுடிகின்றது. ஈழத்துப் பூராடனாரின் இலக்கிய ஆளுமைபற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரும் எதிர்கால ஆய்வாளர்களுக்கு இப்பெருந்தொகுப்பு  தவிர்க்கமுடியாததொரு ஆவணமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20435).

ஏனைய பதிவுகள்