10541 காற்றை அழைத்துச் சென்றவர்கள்: கவிதைகள்.

ஜமீல். (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). மருதமுனை: புதுப் புனைவு இலக்கிய வட்டம், 124 A, ஸ்டார் வீதி, பெரிய நீலாவணை-01, 1வது பதிப்பு, ஜுன் 2013. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்).

80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-50248-3-9.

எவரது சாயலுமற்ற தனித்துவமான கவிதைகள் இவை. சாந்தமாக ஓடும் நதியைப்போன்ற பிராவகம் கொண்டிருப்பினும் இவரது கவிதைகள் சிலரை எரிக்கவும், சிலரை வீழ்த்தவும், தீயாயும் வாளாயும் நீள்கின்றது. குழந்தைகளையே சுற்றிச் சுற்றி வரும் இக்கவிதைகள்அங்காடித் தெருக்களில், தேனீர்க்கடையில், கடற்கரை வெளியில், பேருந்துகளில், கற்குவாரிகளில் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்களை நேசிக்கிறது, பேசுகிறது. அவர்களின் அவலங்களை அந்தரிப்புகளைப் பாடுகிறது. கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனைக் கிராமத்தில் பிறந்த அப்துல் றகுமான் அப்துல் ஜமீல் 1993ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருதைப் பெற்றவர். இவரது முதல் கவிதைப் பிரதி ‘தனித்தலையும் பறவையின் துயர்கவியும் பாடல்கள்” 2007 யாழ் இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும், தடாகம் இலக்கிய வட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றது. ‘உடையக் காத்திருத்தல்’ 2010 கொடகே சாகித்திய விருதின் இறுதிச் சுற்றில் சான்றிதழைப் பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54420).

ஏனைய பதிவுகள்