10544 குருதிக் கொழுந்து: மலையகக் கவிதைகள்.

பதியத்தளாவ பாறூக். பதியத்தளாவ: கவியகம், 104, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (பதிபத்தளாவ: நூன் அச்சகம்).

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-52920-4-7.

கவிஞர் பதியதளாவ பாறூக் எழுதிய 16 கவிதைகளின் தொகுப்பு இது. இந்நூலில் உள்ள கவிதைகள் யாவும் மலையக மக்கள் வாழ்வியல் சார்ந்தவை. மலையகத்தான் என்று மண்டிக் கிடந்தழியும் நிலைகெட்ட நிலையை நின்றிங்கு மாற்றவேண்டும்.  மலையிலே ஏறித்தான் மாடாக உழைக்கின்ற தலையெழுத்தை மாற்ற தரணியிலே முயல வேண்டும் என்ற கருத்தியலே ஊடுபாவாகத் திகழும் இந்தக் கவிதைகளில் மலையக மக்கள் எழுச்சி பெறவேண்டும் என்ற எண்ணக்கரு முதன்மை பெற்றிருக்கிறது. இது ஒர் இலவச வெளியீடு.

ஏனைய பதிவுகள்