தில்லைநாதன் பவித்ரன். திருக்கோணமலை: சிறகுகள் வெளியீடு, 1வது பதிப்பு, 2012. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ்).
ix, 49 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-53380-1-1.
30.6.1990இல் மூதூரில் பிறந்த பவித்ரன் திருக்கோணமலையில் வசித்து வருபவர். உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கல்வி பயிலும்போதே தனது 15ஆவது வயதில் கவிதைகளை எழுதத் தொடங்கியவர். 2006இல் ஈழத்து இலக்கியத்தோடு தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவர். 2010இல் இவரது முதலாவது கவிதைத் தொகுதி ‘ரசவாதம்’ என்ற தலைப்பில் வெளியாகிப் பாராட்டையும் பரவலாகப் பெற்றது. தினக்குரல் வீரகேசரி சுடர்ஒளி, ஞானம், மல்லிகை, நீங்களும் எழுதலாம், ஓசை, மகுடம் ஆகிய இதழ்களில் வெளிவந்த இவரது கவிதைப் படைப்புக்கள் இந்நூலுருவில் வெளிவந்துள்ளன.