10552 சிறகு தரித்த சிலுவைகள்: கவிதைத் தொகுப்பு.

புலவூரான் ரிஷி (இயற்பெயர்:  பரமலிங்கம் அர்த்தனன்). ஒட்டுசுட்டான்: செந்தணல் வெளியீட்டகம், 1வது பதிப்பு, பங்குனி 2015. (வவுனியா: எக்ஸிடோ அச்சகம், இல.34, மில் வீதி).

120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 19×12.5 சமீ., ISBN: 978-955-42129-0-9.

கண்டாவளைப் பிரதேசச் செயலகத்தில் வெளியீடு கண்ட கவிதைத் தொகுப்பு இது. 37 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள். விளிம்புநிலை மனிதரின் வாழ்வியலை சமகாலப் புத்தன், விசித்திர விம்பம், உயிர்க்கொலை, மறக்காமல் வாருங்கள், மனைவி எங்கே ஆகிய கவிதைகளில் காணமுடிகின்றது. தொகுப்பு முழுவதும் நயங்கள், வர்ணனைகள் தவிர்க்கப்பட்டு வலிகளும் துயரங்களும் ஏக்கங்களுமே ஒருவகை விரக்தி நிலையில் பதிவாகியுள்ளன. தனக்குப் பிடித்தவர்கள் மனதால் நெருங்கிவராதபோது, எவ்வளவு சனத்திரளுக்கு மத்தியிலும் தனிமையைக்காணும் ஒருவனின் மனசு போலவே இத்தொகுப்பிலுள்ள  ஒரு மௌனத்தில், விதிக்குப் புரியும், துடிக்க மறந்த இதயம், பெண்மையின் வலிகள், ஓலத்தில் ஒருத்தி போன்ற கவிதைகள் அந்த உணர்வினை ஏற்படுத்துகின்றன. இவ்வுலக வாழ்க்கையில் படும் அவலங்களுக்கெல்லாம் முடிவாக மரணத்தைச் சொல்வர்.  ஆனால் மரணத்தின் பின்பாகவும் அனுபவிக்கும் அவலங்களாக இடுகாட்டில் ஓர் முதலிரவு,  சுடுகாட்டின் தவம், போன்ற கவிதைகள் அமைகின்றன. வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஏற்ப இன்றைய நெருக்கடி நிலையை இவரது படைப்புகள் பதிவுசெய்கின்றன.

ஏனைய பதிவுகள்