வி.எம். சுந்தரம். கிழக்கிலங்கை: அன்னை கண்மணி நூலகம், ஸ்ரீ காளிபுரம், பெரியபோரதீவு, 1வது பதிப்பு, மே 2002. (களுவாஞ்சிக்குடி: கிரேட்டஸ்ட் அச்சகம்).
xvii, 66 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 19.5×13.5 சமீ.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் சுதந்திரன் வார இதழில் தொல்லை சுமக்கத் துணி என்ற தலைப்பில் எழுதிய பரிசுக்கவிதையொன்றின் மூலம் இலக்கிய உலகில் தடம் பதித்தவர் கவிஞர் ‘வீ.எம்.எஸ்.’ அவர்கள். பத்திரிகையாளர் எஸ்.டீ.சிவநாயகம் அவர்களின் ஆதரவுக் கரங்களில் வளர்ந்த இக்கவிஞரின் மரபுக்கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். ஆசிரியப்பணியில் ஈடுபட்டுவந்த இக்கவிஞர் 1950-1960 காலப்பகுதியில் வீறுடன் எழுதிய கவிதைகள் இத்தொகுப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன. கணிசமான அளவிலான கவிதைகள் ஆசிரியப்பணி மற்றும் கல்வித்துறை சார்ந்ததாக அமைந்திருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23768).