அகளங்கன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: பா.பகீரதன், நிர்வாகி, ஈ-மக்ஸ் மீடியா, 1வது பதிப்பு, தை, 2005. (வவுனியா: ஜெய்னிகா கிறாபிக், வைரவபுளியங்குளம்).
vi, 49 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 17.5×12.5 சமீ.
2005 பொங்கல் தினத்தன்று மீண்டும் எழுவோம் என்ற தலைப்பிலான சுனாமிப் பேரலையின் அநர்த்தங்களின் நினைவானதும், அதிலிருந்து மக்களை உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மீட்டெடுக்கும் முயற்சியாக, கவியரங்கம் ஒள்றினை E-Max என்ற ஊடக அமைப்பினர் வவுனியாவில் ஒழுங்குசெய்திருந்தார்கள். ஏசியன் டீவீ யினூடாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு தமிழ்மணி அகளங்கன் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். கவிஞர்களான க.கோகுலதாஸ், குரும்பையூர் த.ஐங்கரன், கே.ஆர்.றஜீவன், சிவநெறிப் புரவலர் சி.ஏ.இராமஸ்வாமி ஆகியோர் கவியரங்கில் இணைந்து கவிதைகள் படித்தனர். அவை அனைத்தையும் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளனர்.