10562 செதுக்கப்படாத சிற்பங்கள்: கவிதைத் தொகுதி.

அ.சுஜானா. கோப்பாய்: முத்தமிழ் மன்றம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, 1வது பதப்பு ஒக்டோபர் 2010. (யாழ்ப்பாணம்; கணபதி பிரிண்டர்ஸ், திருநெல்வேலி).

xiv, 66 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 17×12 சமீ.

புத்தளம் கற்பிட்டியைச் சேர்ந்த அ.சுஜானா கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் தமிழ் சிறப்புக்கலை ஆசிரிய மாணவியாவார். இத்தொகுதியில் இவர் எழுதிய செதுக்கப்படாத சிற்பங்கள், நாய் விற்ற காசு, மரணத்தின் பின், உனது விதியா?, கேட்டுச் சொல்லுங்கள், தூக்குமேடையில் ஓர் இதயம், புரியமுயல்கிறேன், எங்கே தேட, நினைவுகளில் சில நிமிடங்கள், உனக்கு மட்டும், எட்டாவது அதிசயம், இந்நிலா எனக்கு வேண்டாம், நீ ஒதுங்கி விடாதே, எழுந்து வா, உனக்குள் நான் இருக்கின்றேனா, செருப்புகளும் விலை தான், உன்னைப்போல், புதுமை, நாளை, சாக்கடை, சமாதி, சந்தோசம், ஏக்கம், அழுகை, ஆபத்து, அழகு, ஆசை, பிரிவு, நிஜமான நிழல், ஒதுங்கிக் கொள்கின்றேன், சக்திபெற்றவள் பெண்ணே, உன்னைத்தான் சொல்கிறேன், நட்சத்திரம், காதலின் தருணங்கள், மரங்களின் சார்பில் ஒரு கேள்வி, திரை, ஞாபக முட்கள், காதலின் சுவடுகள், காத்திருப்பு, கண்ணீரும் கதை பேசுகிறது, படைப்புகளின் படைப்பாளி, வெற்றி, முடிந்த முகம் ஆகிய 43 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50172).

ஏனைய பதிவுகள்