10567 தடம் தொலைத்த தடயங்கள்: கவிதைத் தொகுதி.

எம் பீ.அன்வர். தமிழ்நாடு: ஓவியா பதிப்பகம், 17-16-5/A, கே.கே.நகர், வத்தலகுண்டு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை: கிரேஸ் கிராப்பிக்ஸ்). 

112 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-41312-0-0.

மட்டக்களப்பு காத்தான்குடி மண் ஈன்றெடுத்த பிரகாசக்கவி எம்.பீ. அன்வரின் கவிதைத் தொகுப்பு இது. பிரகாசக்கவி, சீனிப்போடியார், கிறுக்கல்கள் போன்ற புனைபெயர்களில் 2001முதல் தன் பாடசாலைக்காலங்களிலிருந்தே கவிதைகளை எழுதிவந்துள்ளார்.  உறவு தொடங்கி உலகம் வரையுள்ள பிரச்சினைகள், வலிகள், உணர்வுகள், என அனைத்தையும் கவிதையாய்ப் படைத்துள்ளார். மனதில் தடம் பதிக்கும் எளிய மொழிநடைக்கு விலைவாசி என்னும் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. மதம் தின்னிகளுக்கு ஓர் மனு எனும் தலைப்பின்கீழ் அன்வர் வரையும் கவிதை காலத்துக்கு ஏற்றதாக உள்ளது. மதம், மொழி, கடவுள், இவை பற்றி எத்தனையோ ஆக்கபூர்வ சிந்தனைகள் இருந்தாலும், அன்வரின் சிந்தனை வேறுபட்ட எழுச்சிக்கு வித்திடுவதாய் உள்ளது. தர்க்கம், தார்ப்பரியம், சமுதாய நோக்கு, பெண்மை என்று பல்வேறு பார்வைகளில் இக்கவிதைகள் விரிகின்றன.

ஏனைய பதிவுகள்