கந்தையா கணேஷமூர்த்தி. அட்டாளைச்சேனை: கலை கலாசார மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்).
xxviii, 200 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-52714-0-0.
ஆசிரியரின் கவிதைத் தொகுதி. நுவரெலிய மாவட்டத்தில் இறம்பொடை பிரதேசத்தில் வெதமுல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷமூர்த்தி. கவிஞர் கணேஷமூர்த்தியின் கவிதைகளில் காணப்படும் சொல்லாட்சியும் சொற் சுருக்கமும், அழகியல் பண்பும் இவற்றுடன் இவர் முன்வைக்கும் மனப்பதிவுகளும் செய்திகளும் உள்ளத்தில் அதிர்வுகளை உண்டாக்குவன. கவிஞரின் கவிதைகளில்அவரது சொந்த வாழ்வியல் அனுபவங்களும் இலயிப்புகளும் ஆன்ம தாகமும் அவற்றால் மேற்கிளம்பும் உள்ளத்துணர்வுகளும் சில சந்தர்ப்பங்களில் பச்சாத்தாப உணர்வுகளும் அன்பு மேலீட்டால் மேலெழுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53727).