மணிமேகலை கைலைவாசன். (புனைபெயர்: யாழ். தமிழ்மகள்). கனடா: மணிமேகலை கைலைவாசன், டொரன்ரொ, 1வது பதிப்பு, மே 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ், முத்திரைச்சந்தி).
xi, 92 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42251-0-7.
இயற்கையும் மனிதமும் மணிமேகலையின் கவிதைப் பொருளாகி மேன்மைபெறுகின்றன. உயிர்வலியான துயர அனுபவங்களில் இருந்து மீளத் துடிக்கின்ற ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கான உயிர்ப்பினையும் வல்லமைகளையும் எமதாக்குகின்றன. தாயுமானவன் அறிவு மையம் என்ற சமூக அமைப்பை தாயகச் சிறார்களுக்காக கனடாவில் இருந்து இயக்கிவரும் இக்கவிஞரின் செயற்பாடுகளில் நலிந்த பிள்ளைகளின் நல்வாழ்வு முக்கியம்பெறுகின்றது. கவிதகைளிலும் அதன் தாக்கம் தெரிகின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001432).