10575 தெருப் புலவர் சுவர்க்கவிகள்.

காசி ஆனந்தன். கொழும்பு 12: சுதந்திரன் வெளியீட்டகம், 194ஏ,பண்டாரநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1975. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்;, 194ஏ,பண்டாரநாயக்க வீதி).

(2), 28 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 17.5×12 சமீ.

இரண்டரை ஆண்டு சிறைவாசத்தின்பின்  விடுதலையாகிய கவிஞர் காசி ஆனந்தனின் புதியதொரு அரசியற் கவிதைப் புனைவு இது. தனது கற்பனைப் பாத்திரமான தெருப்புலவர், சுவரில் கரித்துண்டுகளால் எழுதிய நையாண்டிக் கவி வரிகள் இவை. உதாரணத்திற்கு ஒன்று:  ‘அனுபவம்’ என்ற தலைப்பின்கீழ்  எழுதப்பட்ட சுவர்க் கவிதை இது. ‘ஆச்சி சொன்னாள்/ அரசாங்கக் கட்சிக்கிளை/ வைப்பதைவிட/ நாலு முருங்கைக் கிளை வை/ காய்க்கும்/ குழம்பு வைக்கலாம். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 77219).     

ஏனைய பதிவுகள்

14399 கிராமிய வழிபாடு.

மு.மனோகரன். கொழும்பு 6: மு.மனோகரன், வானதி வெளியீடு, 100/16, றொபேட் குணவர்த்தன மாவத்தை, கிரிலப்பனை, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 6: வின்னர்ஸ் அச்சகம், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரிலப்பனை). vi,

11118 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி மூன்று .

சி.பத்மநாதன் (பிரதம பதிப்பாசிரியர்), க.இரகுபரன், ப.யசோதா (உதவிப் பதிப்பாசிரியர்கள்), சாந்தி நாவுக்கரசன் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலவல்கள் இராஜாங்க அமைச்சகம், 98