ம.அ.வினோராஜ். மன்னார்: ம.அ.வினோராஜ், பார்மேனி வீதி, கீரி-மன்னார், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கொழும்பு 6: ஹரே பிரின்டர்ஸ், 36, ஸ்டேசன் வீதி).
vii, 73 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-52872-03.
என்மடல், இருப்பு, சிறு துளியும் நிலம் நனைக்கும், வாழ்வின் ஓவியம், இதய ஓசையின் உதயம், பால் நிலவு என இன்னோரன்ன கவித் தலைப்புகளில் எழுதப்பட்ட வினோராஜின் கன்னிக் கவிதைப்படைப்பு இது. வேதங்கள் பேசுபவை, இனங்கள் பேசுபவை, சமூகத்தின் அநாகரீகங்களும் கொடுமைளும்; பேசுபவை, காதல் பேசுபவை, நகைச்சுவைகள் பேசுபவை அனைத்திற்கும் மேலாக தாய்மையைப் பேசுபவை, பெண்மையைப் பேசுபவை இவரது கவிதைகளாகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 226528).