10579 தேடும் தேசம்: கவிதைத் தொகுப்பு.

சி.ரஜீவ்காந்த். மட்டக்களப்பு: மறுகா, ஆரையம்பதி 3, 1வது பதிப்பு, பங்குனி 2002. (மட்டக்களப்பு: St. Ignatiou Type Setting, 28, Sinnalebbe Street).

x, 53 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20.5×14.5 சமீ.

மட்டக்களப்பு கல்லடி-உப்போடை, சிவானந்தா வித்தியாலய உயிரியல் பிரிவு மாணவனான சி.ரஜீவ்காந்தின் மரபுக் கவிதைத் தொகுப்பு இது. ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 02.01.1985இல் பிறந்தவர். இவர் தனது செயற்றிட்ட ஒப்படையாக இக்கவிதைத் தொகுப்பினை ஆக்கியுள்ளார். கிட்டவரும் வண்ணச்சிட்டு நீயே, புவியிலே வந்த பூக்கள், முத்தே என் முத்தாரமே, இதழ் மூடாத முல்லை மலரே என்றவாறாக இத்தொகுதியில் இவர் எழுதிய 28 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31011).

ஏனைய பதிவுகள்