க.பரணீதரன், த.கலாமணி (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2010. (பருத்தித்துறை: சதாபொன்ஸ் நிறுவனம்).
vii, 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ.
ஜீவநதி சஞ்சிகையின் கடந்த 20 இதழ்களில் வெளிவந்த கவிதைகளுள் தேர்ந்த 60 கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. ஜீவநதியின் மூன்றாவது பிரசுரமாக இது வெளிவந்துள்ளது. சோ.பத்மநாதன், ஏ.இக்பால், கல்வயல் வே.குமாரசாமி, மேமன்கவி, அருள்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின், இ.சு.முரளிதரன், ந.சத்தியபாலன், த.ஜெயசீலன், இயல்வாணன், சுகிர்தராணி, தாட்சாயணி, மிருசுவிலூர் எஸ். கார்த்திகாயினி, துவாரகன், சிற்பி, த.கலாமணி, ஆழியாள், சாரங்கா தயானந்தன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், பிரமிளா பிரதீபன், மைத்திரேயி, இ.ஜீவகாருண்யன், பெரியஐங்கரன், வே.ஐ.வரதராஜன், கண.மகேஸ்வரன், வெற்றிவேல் துஷ்யந்தன், த.அஜந்தகுமார், சபா.ஜெயராசா, ஆ.மு.சி.வேலழகன், ம.பா.மகாலிங்கசிவம், வட அல்வை சின்னராஜன், கருணை ரவி, கெகிராவை ஸஹானா, கெக்கிராவ சுலைஹா, ச.முருகானந்தம், யோகி, எல்.வஸீம் அக்ரம், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தேஜஸ்வினி, மன்னார் அமுதன், மருதம் கேதீஸ், க.தர்மதேவன், கோகுலராகவன், இணுவையூர் லட்சுமிபுத்திரன், கு.றஜீபன், நிந்தவூர் ஷிப்லி, நாச்சியாதீவு பர்வீன், வை.சாரங்கன், ச.லலிசன், வேல்நந்தன், க.சுதர்சன், தெ.இந்திரகுமார், ச.நிரஞ்சனி, சிவராசா நிமலன், கொற்றை பி.கிருஷ்ணானந்தன், றாதிகா, தியத்தலாவ ரிஸ்னா, கொட்டகலை ச.சிவகுமார், ஆரையூர்த் தாமரை, பேருவளை றபீக் மொஹிடீன், மாயா ஆகிய படைப்பாளிகளின் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 212835).