10585 நல்லை வெண்பா.

சேனாதிராய முதலியார் (மூலம்), க.முருகேசபிள்ளை (குறிப்புரை). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் செந்தமிழ் பதிப்பகம் வெளியீடு, புலோலி தெற்கு, பருத்தித்துறை, 1வது பதிப்பு, 1942, (பருத்தித்துறை: யாழ்ப்பாணம் செந்தமிழ் பதிப்பகம்).

xi, (7), 73 பக்கம், விலை: 8 அணா, அளவு: 18×12 சமீ.

யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார் இயற்றிய பிரபந்தமான நல்லை வெண்பா, யாழ்ப்பாணத்துப் புலோலி வித்துவான் க.முருகேசபிள்ளையவர்கள் எழுதிய குறிப்புரையுடன் கூடியதாக வெளியிடப்பட்டுள்ளது. சேனாதிராச முதலியார் (1750-1840) ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். ஒல்லாந்தர் காலத்தில் மொழி பெயர்ப்பு முதலியாராக உயர் பதவி வகித்தவரும், தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஆங்கிலம், ஒல்லாந்தர் மொழி, மற்றும் போர்த்துக்கேயர் மொழி ஆகியவற்றைக் நன்கு கற்றவரான நெல்லைநாத முதலியாருக்கு மூத்த மைந்தராக சேனாதிராச முதலியார் 1750 ஆம் ஆண்டு இருபாலையில் பிறந்தார். ஆறுமுக நாவலருக்கும் சரவணமுத்துப் புலவருக்கும் அம்பலவாணப் பண்டிதருக்கும் நீர்வேலி பீதாம்பரப் புலவருக்கும் இவர் நற்றமிழ் ஆசிரியராவார். இவர் இளவயதில் தந்தையாரிடம் தமிழும் பிறமொழிகளும் கற்று அறிந்த பின் மாதகல் சிற்றம்பலப்புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று உணர்ந்தார். ஒல்லாந்த மொழி போர்த்துகேய மொழி ஆங்கிலம் முதலிய மொழிகளையும் தந்தையாரிடம் நன்கு கற்று, ஒல்லாந்தர் காலத்தில் உயர்ந்த அரசாங்க வேலையாக கருதப்பட்ட துவிபாஷகர் எனப்படும் மொழிபெயர்ப்பு முதலியாராகவும், பின் சட்டமும் கற்று யாழ்ப்பாணம் பெரிய நீதிமன்றத்தில் வழக்குரைப்பாளராகவும் பணியாற்றிவந்தார். ஆங்கிலயர் காலத்தில் இவர் நீதிபதியாக இருந்தார் என்றும் கூறுவர். சேனாதிராச முதலியார் பல வகைச் செய்யுள் பாடுவதிலும் சிறந்து விளங்கினார். நல்லூர் கந்தசுவாமியார் மீது மிகுந்த பக்தி பூண்டு இருந்தமையால் அக்கடவுள் மீது நல்லை வெண்பா, நல்லையந்தாதி, நல்லைக்குரவஞ்சி முதலிய பிரபந்தகளும் பல தனி நிலைச் செய்யுள்களும் இயற்றியுள்ளார். நல்லை வெண்பா இவரது மாணவரான அம்பலவணப் பண்டிதரால் 1870களில் அச்சிடப்பட்டதால் முழுமையாக கிடைத்துள்ளது.

ஏனைய பதிவுகள்