10586 நாரறுத்த நிலவுகள்: கவிதைத் தொகுதி.

வாகைக் காட்டான். ஒட்டுசுட்டான்: செந்தணல் வெளியீட்டகம், 1வது பதிப்பு, பங்குனி 2015. (வவுனியா: எக்ஸிடோ அச்சகம், இல.34, மில் வீதி).

72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-77620-0-5.

பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் இக்கவிஞர் கிளிநொச்சியில், பெரியகுளம்-கண்டாவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது வாழ்வியல் சூழல், அனுபவங்கள், வலிகள், ரணங்கள், பட்டறிவு, மகிழ்வு, நம்பிக்கைகள் எனப் பலதையும் தனது கவிதைகளின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார். பிறைத்துளி என்ற கவிதையில் ஒரு தந்தையின் எதிர்பார்ப்பானது அறுந்துபோனதன் துயரம் வெளிப்படுத்தப்படுகின்றது. நினைவுகளில் நீ என்ற மற்றொரு கவிதையில் கனவுக்கும் வருந்தவைக்கும் நனவுக்கும் இடையிலான, கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் அங்கலாய்க்கும் ஒரு பெண்ணின் மனநிலையைத் தரிசிக்கமுடிகின்றது. இவ்வாறு சாதிப் பிரச்சினையின் மற்றொரு வடிவத்தை தீக்குச்சிகளை அணைக்காதீர்கள் என்ற கவிதையும், பட்டணத்துக்கும் கிராமத்துக்கும் இடையேயுள்ள வசதி வேறுபாட்டை உண்மையில் கண்ணீர் என்ற கவிதையிலும் காணமுடிகின்றது. இவ்வாறே இத்தொகுப்பில் நாடக மேடை என்ற முதலாவது கவிதை தொடங்கி, பூவொன்று வாய்மையை வாய்மொழிகிறது என்ற 29ஆவது (இறுதிக்)கவிதை வரையும் விதம்விதமான உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன.

ஏனைய பதிவுகள்

11207 கந்தரநுபூதி மூலமும் உரையும்.

அருணகிரிநாதர் (மூலம்), க.கார்த்திகேசு யோகி (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: வழக்கம்பரை பஜனைச் சபை, வழக்கம்பரை, 1வது பதிப்பு, வைகாசி 1978. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xi, 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.