கி.இலட்சுமணன். யாழ்ப்பாணம்: கி. இலட்சுமணன், நாவற்குழி, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: எஸ்.ரீ.பீ. பிரின்டேர்ஸ்).
(8), 76 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியராகக் கடமையாற்றும் கி. இலட்சுமணன் எழுதிய கவிதைகளின் முதற் தொகுப்பு இது. துணிந்து நில், அளவாகப் பேசு, அநீதியை உடை, வன்னி மக்களின் துன்பம், உழைத்தால்தான் உணவு, தமிழினம் தாழ்ந்தது ஏன், சாதி தகர்த்தது, இன்னுமா அழுவாய்?, நோய்ப் பகைவன், திடமனம் சிதைத்தாள், ஏழைகள், சுவர் ஓவியம், சிரிப்பின் சிறப்பு, மதுக் கொல்லி, மனிதர்கள் எங்கே, கடைசி அடி, இரண்டு போதும், நினைத்தால் முடியாதது எது?, பண்பாடு காப்பாய், உன்னைப்போல் எனை நோக்காரோ?, தாயின் சிறப்பு, கெட்டித்தனம் வேண்டும், ஒழுக்கம் வாழ்வு தரும், இலக்கியம் எமக்கொரு வழிகாட்டி என இன்னோரன்ன பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட 60 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவை மானிட எழுச்சி, மனித மேம்பாடு, சுய முன்னேற்றம் சார்ந்த அறிவுரைகளாக அமைவதுடன், சுகாதார, மருத்துவக் கருத்துகளையும் சில கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31126).