ஷாமிலா ஷெரீப். வாகனேரி 30424: செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம், SIM Publication, River Bank Road, Kawatthamunai, 1வது பதிப்பு, ஜுன் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
(18), 65 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-1447-01-4.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேசத்தில் செம்மண்ணோடை கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ‘வாழையூர் நிலா’ என்று அறியப்பெற்ற ஷாமிலா ஷெரீப். தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரியில் கற்றுத்தேர்ந்த அவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப்பட்டதாரியாவார். கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். 2002இலிருந்து கவிதை எழுதிவரும் இவர் எழுத்தாளர் முஸ்டீனின் துணைவியாராவார். இந்த நூலுக்கும் முஸ்டீனின் மற்றமொரு நூலான மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் என்ற நூலுக்கும் ஒரே சர்வதேச நூற்பதிவெண் (ISBN) தரப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.