நந்தா (இயற்பெயர்: நந்தீஸ்வரி துரைராஜா). வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 2015. (வவுனியா: அகரம் அச்சகம்).
xiv, 100 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42754-0-9.
இக்கவிதைத் தொகுப்பில் தமிழன்னைக்கு ஓர் மடல் என்ற கவிதை முதல், அன்பு என்ற கவிதை ஈறாக 76 கவிதைகள் அடங்கியுள்ளன. மாருதம் இதழின் உதவி ஆசிரியரான கவிஞை நந்தா கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் தடம்பதித்தவர். இவரது ‘உயிர்க்கும் விழுதுகள்’ என்ற முன்னைய தொகுப்பினைத் தொடர்ந்து வரும் இரண்டாவது கவிதைத் தொகுதி இது. இவரது கவிதைகள் ஆழ்ந்த சமூக நோக்குடையவை. சமூகத்தை விழிப்படையச் செய்பவை. எளிமையான மொழிப்பிரயோகத்தில் ஆங்காங்கே எதுகை மோனை விரவிநிற்கும் புதுக்கவிதைகள் அவை. இன்றைய பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் பெண்ணியம் சார்ந்த கருத்துநிலை, பெண்ணியம் சார்ந்த விழிப்புணர்வு, பெண்ணியம் சார்ந்த இயங்குநிலை, பெண் மொழி என்றவாறெல்லாம் விமர்சனக் கட்டுடைப்புகள் நிகழ்த்துகின்ற சமகாலத்தில் அவற்றுக்கான தீனி நந்தாவின் கவிதைகளிலும் உள்ளன. யாழ்ப்பாணம் வழக்கம்பரையைப் பிறப்பிடமாகவும் வவுனியா கோவில்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட நந்தா, வவுனியா பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றுகிறார்.