10590 நிலவைத் தேடும் வானம்.

வன்னியூர் செந்தூரன் (இயற்பெயர்: சுந்தரமூர்த்தி செந்தூரன்).  வந்தாறுமூலை: வன்னியூர் செந்தூரன், செந்தணல் வெளியீடு, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜனவரி 2013. (வவுனியா: தீபன் அச்சகம், யாழ். வீதி).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 240., அளவு: 19.5×14.5 சமீ.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்துறை மாணவனான செந்தூரனின் புதுக் கவிதைத் தொகுப்பு. நாம் பட்ட துன்ப வடுக்களையும் சமூக அவலங்களையும் சில காதல் நினைவுகளையும் இக்கவிதைகள் சொல்கின்றன. யுத்தம் சார்ந்த கவிதைகள், யுத்தத்தின் மேல் வெறுப்பை ஊட்டுவனவாக அமைந்துள்ளன. சொற்களும் சொல்லிய விதங்களும் பொருள்களும் சிறப்பாக அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்