10593 நீ வரும் காலைப் பொழுது: கவிதைகள்.

வாழைச்சேனை அமர். மீராவோடை 30426: வாழைச்சேனை அமர், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வீதி, செம்மனோடை, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யூ.கே.அச்சகம், 98ஏ, விவேகானந்த மேடு).

xii, 78 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×12 சமீ., ISBN: 955-8683-02-07.

தனது சமுதாயத்தின் மன ரணங்களை, துயரங்களை, இழப்புகளை, இடம்பெயர்வுகளை, இழந்து போகாத நம்பிக்கைகளை, இறுமாப்புக்களை, போராடித்தான் வாழ்வை மீட்கவேண்டும் என்ற இக்கட்டில் முழி பிதுங்கும் ஒரு சமுதாயத்தின் அவலங்களின் எதிர்வுகூறல்களாக இக்கவிதைகள் சடைத்துப் புடைத்து விலங்குடைத்த நமது சூழலையும் நம்மையும் வியாபித்து விடுகின்றது. இம்மண்ணின் துயரங்களோடு பிணைந்து வாழும் ஒரு கவிஞனின் இரண்டாவது கவிதைத் தொகுதி இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39931).

ஏனைய பதிவுகள்