கற்பகம்.யசோதர (மூலம்), பாலசுப்பிரமணியம் காண்டீபராஜ் (தொகுப்பாசிரியர்). சென்னை 600026: வடலி வெளியீடு, F 1, R.K.N.Constructions, 8A,Srivari Flats, லட்சுமிபுரம், வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
136 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-0-9919755-4-9.
நீத்தார்களுக்காக எழுதப்பட்ட இந்தப் பாடல்கள் அதிகாரத்திலிருப்பவர்களின் ஆடுகளமாக தகவமைக்கப்பட்ட இந்த உலகில் எப்பொழுதும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்குமான பாடல்களாகவே இருக்கின்றன. ஈழத்தில் இனமுரண்பாடுகள், வன்முறைகள் முனைப்பெடுத்து உக்கிரம் கொண்ட எண்பதுகளில் பிறந்தவர் கற்பகம். யசோதர. தொண்ணூறுகளின் மத்தியிலிருந்து ஈழத்துக்கு வெளியில் மேற்கு நாடொன்றில் வசிப்பவர். இவரது முதலாவது கவிதைத் தொகுதி இது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் இரண்டாயிரத்தி இரண்டில் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இறுதிப் போர் வரையிலான காலப்பகுதியும் மனித அழிவும் இத்தொகுதியின் உள்ளடக்கங்களாக உள்ளன. ஓர் ஊழிக்காலத்தின் பாடல்களை எந்தவிதமான பாசாங்குகளுமற்ற மொழியில் பாடிப் போயிருக்கும் இக்கவிதைகள், உலகெங்கும் அதிகாரங்களின் அடக்குமுறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் உரியது.