தெமோதரை குறிஞ்சிவாணன் (இயற்பெயர்: சி.வி.பழனியாண்டி மாணிக்கம்). திருக்கோவில் 32420: வி.பி.எம். வெளியீடு, பிரதான வீதி, சாகாமம், 1வது பதிப்பு, 2015. (தம்பிலுவில்: எம்.ஆர்.எஸ். ஓப்செட் பிரின்டர்ஸ்).
xix, 20-93 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955- 42082-0-9.
தெமோதரை குறிஞ்சிவாணன், தனது முதலாவது கவிதையை ‘வெற்றி நமதே’ என்ற பெயரில் வீரகேசரி-தோட்ட மஞ்சரி பகுதியில் 1963இல் பிரசுரிக்கப்பெற்றவர். 1963ம் ஆண்டிலிருந்தே கவிதை புனைந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக அத்துறையில் ஈடுபட்டுவரும் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. அவரது 70ஆவது அகவையில் வெளிவந்துள்ளது . இவரது முதலாவது தொகுப்பினை ‘இன்னும் விடியவில்லை’ என்ற தலைப்பில் முல்லை வீரக்குட்டி, தம்பிலுவில் ஜெகா, ஆகியோருடன் இணைந்து 1998இல் வெளியிட்டிருந்தார். இரண்டாவது தொகுப்பு ‘துயரம் சுமக்கும் தோழர்களாய்’ என்ற பெயரில் 2011இல் வெளிவந்தது. இவரது கவிதைகளில் மனிதத் துயரங்கள், இயற்கை, காதல், வெற்றி-தோல்விகள், வறுமை எனப்பல விடயங்களை பாடுபொருளாகக் கைக்கொண்டுள்ளார். இந்நூலில் இவரது விரிவான சுயசரிதையும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.