தமிழ்நேசன். மன்னார்: மன்னா வெளியீடு, மன்னா பத்திரிகைப் பணி மையம், 31/2, வைத்தியசாலை வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (மன்னார்: மன்னார் பிளாஷ்).
xxx, 157 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.
இந்நூல் தமிழ்நேசன் அடிகளாரின் 147 கவிதைகளை எழுத்தின் எத்தனிப்புக்கள், தனி நபரின் தவிப்புக்கள், முன்னேற்றத்தின் முகவரிகள், நேசிப்பின் நெஞ்சங்கள், குடும்பத்தின் குமுறல்கள், தாய்க்குலத்தின் தத்தளிப்புக்கள், சமூகத்தின் சஞ்சலங்கள், சிரிப்பின் சிந்தனைகள், யுத்தத்தின் சத்தங்கள், இறையின் இனிமைகள், உலகத்தின் உரசல்கள் ஆகிய 11 தலைப்புகளில் உள்ளடக்குகின்றது. சமூகத்தைத் திருத்தும் கவிதைகளாகவும், சிந்தனையைத் தூண்டும் கவிதைகளாகவும், சமூக மாற்றத்தை விரும்பும் கவிதைகளாகவும் எளிமையும் இனிமையும் கொண்டு அமைகின்றன. மனித நடத்தைகள், மனித உறவகள், பெண்கள், அரசியல் நிகழ்வுகள் எனப் பல விடயங்களை இவை உள்ளடக்குகின்றன. இத்தொகுப்பில் பக்கங்கள்தோறும் அமைந்த சித்திரங்களும் கவிக்கூறுகளாய் அமைந்து மெருகேற்றுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47935).