10599 நெருப்பின் உதிரம்(கவிதைகள்).

கருணாகரன். கிளிநொச்சி: மகிழ் வெளியீடு, 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன்).

84 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் 1963இல் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். கவிஞராகவும், ஒரு கதை சொல்லியாகவும், ஊடகவியலாளராகவும், தொடர் இலக்கியச் செயற்பாட்டாளராகவும், பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர். ‘வெளிச்சம்’ கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும், வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமகாலத்தில் பயணித்த ஓர் போராளியாவார். இதுவரையில், ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’, ‘ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்’, ‘நெருப்பின் உதிரம்’, ‘இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்’ என்று ஏழு கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. எட்டாவது மகிழ் வெளியீடாக வரும் இக்கவிதைத் தொகுதி கருணாகரனின் 56 கவிதைகளை உள்ளடக்குகின்றது. கருணாகரன் வடபுலத்தில் சுயாதீன ஊடகவியலாளராக இயங்கி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

11141 இந்து சமய சாரம்: சிறுவர்க்கான சமயக் கட்டுரைகள்.

இரா.கந்தையா. கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 8: அரசாங்க அச்சகம்). xii, 129 பக்கம், விலை: இலவச வெளியீடு, அளவு: