10608 பிணம் தின்னிக் கழுகு.

வ.பிரபு. அளவெட்டி: யா/அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம், 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(9), 55 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17×12.5 சமீ.

வ.பிரபு, மாவிட்டபுரம், கலட்டி தெல்லிப்பழையில் பிறந்தவர். 2005ஆம் ஆண்டிலிருந்து கவிதைகளைப் படைத்து வருபவர். இவர். யாழ்/கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் 2000ஆம் ஆண்டுவரை க.பொ.த. சாதாரண தரம் வரை படித்து, யாழ்/ஸ்கந்தவரோதயா கல்லூரியில் 2003ம் ஆண்டு வர்த்தகப் பிரிவில் உயர்கல்வியைப் பூர்த்தி செய்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘பிரிவின் யதாரத்தங்கள்’ 2010இல் வெளிவந்தது. இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 219364).  

ஏனைய பதிவுகள்