வாசு-முத்தழகன் (இயற்பெயர்: வாசுதேவலிங்கம் முத்தழகன்). யாழ்ப்பாணம்: ஈழத்தமிழர் சைவப் பண்பாட்டுக்கழகம், 120/4 திருவள்ளுவர் சாலை, கந்தர்மடம், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: கற்பகவிநாயகர் அச்சகம், 295/7, காங்கேசன்துறை வீதி).
(8), 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பண்ணாகத்தை பிறப்பிடமாகக்கொண்ட வாசு-முத்தழகன் புலம்பெயர்ந்து ஜேர்மனியின் Aalon நகரில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த எம் தமிழ் உறவுகள் வெளிநாட்டில் படும் பாடுகளையும், அனுபவிக்கும் இன்னல்களையும், தன் சுய அனுபவங்களையும் சேர்த்து அழகுணர்வுடன் கவிதைகளாக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31062).