மாதகல் மயில்வாகனப் புலவர் (மூலம்), ம.க.வேற்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: வே.திருஞானசம்பந்தப் பிள்ளை, பிரதம உபாத்தியாயர், இந்து ஆங்கில திராவிட வித்தியாசாலை, மட்டுவில், 2வது பதிப்பு, விசுவாவசு வருடம் 1906, (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை).
60 பக்கம், விலை: அணா 4., அளவு: 21.5×14 சமீ.
புலியூரந்தாதி: மூலமும் உரையும்.
மாதகல் மயில்வாகனப் புலவர் (மூலம்), ம.க.வேற்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: வே.மாணிக்கவாசகர், வழக்கறிஞர், 3வது பதிப்பு, சித்திரை 1970, 2வது பதிப்பு, மாசி 1906, 1வது பதிப்பு, கார்த்திகை 1882. (யாழ்ப்பாணம்: சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில்).
xiii, 52 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 2.00, அளவு: 21.5×14 சமீ.
100 செய்யுள்களில் எழுதப்பட்ட அந்தாதி இலக்கியம் இதுவாகும். உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையவர்களது சரித்திரத்தை பண்டிதை ச.அமிர்தாம்பிகை இந்நூலில் எழுதியுள்ளார். இந்நூலை வெளியிட்ட வே.மாணிக்கவாசகர் உரையாசிரியர் வேற்பிள்ளையின் மைந்தராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118710).