கார்மேகம் நந்தா. நோர்வே: ஸ்ரீ சரஸ்வதி நுண்கலைப் பீடம், 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைஸஸ்).
124 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×13.5 சமீ.
1973இல் இலங்கை வானொலியில் இணைந்த கார்மேகம் நந்தா, 1987இல் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வருகின்றார். 40 ஆண்டுகளாகப் பாடல்களை எழுதிவரும் நந்தாவின் தேர்ந்த 101 சந்தப்பாடல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55611).