இனியவன் இஸாறுதீன் (இயற்பெயர்: முஹம்மது அலியார் இஸாறுதீன்). அட்டாளைச்சேனை: முஃப்லிஹா இஸாறுதீன், 12ஏ, முதலாவது குறுக்குப் பாதை, டீன்ஸ் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
138 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-44748-0-2.
அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இனியவன் இஸாறுதீனின் கவிதைத் தொகுப்பு இது. தான் கொண்ட சமூகப்பற்றின் காரணமாக, அடக்கு முறைக்கு எதிராகவும் இனவெறிக்கு எதிராகவும் எரிமலையாகக் கனல்கக்கும் கவிதைகளை இயற்றியுள்ளார். இவை அக்கிரமக்காரர்களை, அநீதி இழைக்கும் ஆசாடபூதிகளை ஆக்ரோஷமாகச் சாடுகின்றன. பாரதி, பாரதிதாசன் பரம்பரையின் பின்னால் தோன்றிய அப்துல் ரஹ்மான், மேத்தா போன்றோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் கவிஞர் குழுவைச் சேர்ந்தவர் இஸாறுதீன். மீட்டெடுப்பு என்ற கவிதையில் ‘பசிக்காகப் புசித்தால் பல்லாண்டு வாழலாம். ஆனால் ருசிக்காகப் புசித்து நோய்க்கு உணவானோம்’ என்று வேதனைக் குரல் எழுப்புகின்றார். உரிமை, சமத்துவம், சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை என்பவற்றை அடிநாதமாக வைத்து இவ்வெழுச்சிக் கவிதைகளைப் பாடியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53375).