எஸ். ஹூஸைன் மௌலானா. கொழும்பு: மிலேனியம் கல்வி ஸ்தாபனம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xi, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-51290-0-8.
அங்கு ஈரானிய முல்லாக்கள் மசூதிகளின் தொழுகைக்குப் பின்னர் மத்திய கிழக்கை விழுங்கிக்கொண்டிருக்கிற சியோனிசத் தீமைகளை எவ்வாறு எதிர்கொள்வதென்றும், ஒரு கௌரவமான வாழ்வுக்குரிய தகுதியை எவ்வாறு பெற்றுக்கொள்வதென்றும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். இதே வேளை அற்ப புத்திகொண்ட அரேபிய முல்லாக்களும் எமது உள்ளுர் முல்லாக்களும் இன்று மசூதி, வானொலி, சமயப்பாடசாலைகளில் சுயநலம், பதவிப்போட்டி என்று சில்லறை விடயங்களை ஆராய்ந்து வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சாடும் இக்கவிஞன், தனது கவிதைகளின் வாயிலாக புத்தெழுச்சிகொண்டதொரு இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று தன் கவிதைகளின் மூலம் முயன்றுள்ளார். சமூக மாற்றம் -நூல் வெளியீட்டுத் தொடரில் 7ஆவது பிரசுரம் இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 219473).