முஸ்டீன். வாகனேரி 30424: செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம், SIM Publication, River Bank Road, Kawatthamunai, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
103 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-1447-01-4.
இந்நூலின் ஒவ்வொரு கவிதையிலும் வெவ்வேறுபட்ட போர்ச் சூழலையும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைப்பாட்டைப் பற்றியும் போருக்குப் பின்னர் அம்மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தன் கவியாற்றல் மூலம் அழகாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக, முதற் கவிதையான மீண்டும் உன் வருகைக்காக என்னும் கவிதையில் போரில் தோற்றுப்போய் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் உணர்வுகளைப் பதிவாக்கும் அதேவேளை, பட்டமரம் துளிர்க்கும் வாழ்வதற்காய், கண்ணீருக்குப் பின்னால் ஆகிய மற்றுமிரு கவிதைகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையை மிக அழகாகச் சித்திரிக்கிறார்.