மீசாலையூர் கமலா. யாழ்ப்பாணம்: மணிஓசை வெளியீட்டகம், 12, சென் பற்றிக்ஸ் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).
52 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 18.5×13.5 சமீ.
இன ஒடுக்குமுறைக்கெதிராகவும் பெண்ணடிமைக்கு எதிராகவும் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. தமிழ்மக்கள்மீது போர் விதித்துள்ள சுமைகள், அழிவுகள், இழப்புகள் பற்றியெல்லாம் இவரது கவிதைகள் கோஷமிடுகின்றன. வாசலில், காத்தருள் கந்தா, வல்லமை தந்திடு, கை கொடுப்பாயா, பார் திலீபா பார், விலங்கொடிப்பாள், சமுதாயம் தரும் பட்டங்கள், நிம்மதி பிறக்க நீயருள்வாயா, குணத்தை மட்டும் கொள்வீரா, மகிழ்ச்சியுற்றிட என இன்னோரன்ன தலைப்புகளில் இவை விரிகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114607).