பீ.ஏ.சீ.ஆனந்தராஜா. வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (வவுனியா: ஜெய்னிகா கிராபிக், இல. 71, வைரவர் கோவில் வீதி, வைரவபுளியங்குளம்).
xiv, 208 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 29×21 சமீ.
இந்நூலில் இருட்டினில் குருட்டாட்டம், அழையா விருந்தினன், தொடர்புகள் துளிர்க்கின்றன, பாப்பா யானை வீரனல்லோ, நாடோடி, புரட்சிக்குள் ஒரு பாதை, யானையும் சிட்டுக் குருவியும், பாதகாணிக்கை, சூழ்ச்சி, கற்பனைச் சுவர், தரிசனம், எலிப்பொறி, கைக்குட்டை, ஊடுருவிகள், ஊர்வலங்கள், றோசா மலர்கள் ஆகிய 16 நாடகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இளவாலை ஹென்றீஸ் கல்லூரியின் நாடகத்துறையில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்ட இந்நூலாசிரியரின் பேரனாரான வேந்தர்க்கோன் முதலியார் வவனியாவில் பெயர்பெற்ற நாடகக்கலைஞராவார். சமகால அரங்கியல் அறிஞர்களுடன் மிகுந்த ஈடுபாடுகொண்ட பீ.ஏ.சீ.ஆனந்தராஜா, நாடக ஆற்றுகைக்காகப் பல பரிசில்களைப் பெற்றுள்ளார். இவரது ‘இருட்டினிலே குருட்டாட்டம்’ என்ற நாடகம் கலாசார அமைச்சினால் நடத்தப்பெற்ற அகில இலங்கை நாடகப் போட்டியில் வெற்றிபெற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் யாழ். இந்துக் கல்லூரியிலும் மேடையேற்றப்பட்டது.